சிங்கப்பூர் பிரதமர் இன்று இந்தியா வருகை
லாரன்ஸ் வாங் 3 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று இந்தியா வருகிறார்.;
டெல்லி,
சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங் 3 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று இந்தியா வருகிறார். டெல்லி வரும் அவரை அதிகாரிகள், மந்திரிகள் வரவேற்க உள்ளனர்.
இந்தியா, சிங்கப்பூர் இடையேயான வர்த்தகம் தொடங்கி 60 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று லாரன்ஸ் வாங் இந்தியா வருகிறார். அவர் நாளை, பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திக்கிறார். பிரதமரான பிற்கு லாரன்ஸ் வாங் முதல் முறையாக இந்தியா வருகிறார்.
டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்கும் லாரன்ஸ் வாங் இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். மேலும், இந்தியா - சிங்கப்பூர் முதலீட்டில் மராட்டிய துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்டெய்னர் முனையத்தை இருநாட்டு தலைவர்களும் திறந்து வைக்கின்றனர். மேலும், இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.