மராட்டியம்: நடைபாதையில் நடந்து சென்றவர்கள் மீது மோதிய லாரி - 6 பேர் பலி

லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2025-08-31 05:45 IST

மும்பை,

மராட்டிய மாநிலம் பீட் மாவட்டம் நமல்ஹான் பகுதியில் உள்ள சாலையோர நடைபாதையில் நேற்று காலை 7.30 மணியளவில் பலர் நடந்து சென்றுகொண்டிருந்தனர்.

இந்நிலையில், அப்பகுதியில் உள்ள சாலையில் வேகமாக வந்த லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நடைபாதையில் நடந்து சென்றவர்கள் மீது மோதியது.

இந்த கோர விபத்தில் சாலையோர நடைபாதையில் நடந்து சென்ற 6 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்