ஆசிரியர் தகுதி தேர்வு: தமிழகத்தை தொடர்ந்து உத்தரபிரதேசமும் சீராய்வு மனுதாக்கல் செய்ய முடிவு

தகுதித்தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.;

Update:2025-09-16 21:38 IST

லக்னோ,

கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 8-ம் வகுப்பு வரை பயிற்றுவிக்க கூடிய இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மத்திய, மாநில அரசுகளால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வுகளில் வெற்றி பெறுவது கட்டாயமாகும். அடுத்த 2 ஆண்டுகளில் இந்த தகுதித்தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

இதனால் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுதாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தை தொடர்ந்து உத்தரபிரதேச அரசும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அந்த மாநில கல்வித்துறைக்கு சீராய்வு மனு தாக்கல் செய்யும்படி முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்