ஏர் இந்தியா விமானத்தில் தொழில் நுட்பக்கோளாறு: பயணிகள் அவதி

டெல்லியில் இருந்து கொல்கத்தா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது.;

Update:2025-07-22 05:13 IST

புதுடெல்லி,

டெல்லியில் இருந்து மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிற்கு ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான AI2403 என்ற விமானம் நேற்று மாலை 5.30 மணிக்கு புறப்பட இருந்தது. பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏறி அமர்ந்த நிலையில், புறப்படுவதற்கு தேவையான அனைத்து நடைமுறைகளும் முடிந்த பிறகு விமானம் ரன்வேயில் ஓட தொடங்கியது.

ரன்வேயில் விமானம் புறப்பட்டு டேக் ஆப் ஆக இருந்த சமயத்தில், விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார். 155 கி.மீ வேகத்தில் விமானம், ரன்வேயில் ஓடிக்கொண்டு இருந்த போது விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானி கண்டறிந்தார். உடனடியாக நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விமானம் டேக் ஆப் ஆவதை விமானி கைவிட்டார்.

விமானத்தில் இருந்து அனைத்து பயணிகளும் உடனடியக வெளியேற்றப்பட்டனர். விமானம் டேக் ஆப் ஆக இருந்த சமயத்தில் நிறுத்தப்பட்ட சம்பவம் டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. சரியான நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த எதிர்பாராத இடையூறு காரணமாக பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மனதார வருந்துகிறோம் என ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்