ரூ. 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் - கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார்

வருவாய் ஆய்வாளர் மகேசை கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2025-05-28 20:24 IST

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மாவட்டம் முஷிராபாத் தாசில்தார் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பூபால மகேஷ். இவர் அதேபகுதியை சேர்ந்த நபரிடம் சொத்து பிரச்சினை தொடர்பாக குடும்ப சான்றிதழ் வழங்க ரூ. 1 லட்சம் லஞ்சம் கொடுக்கும்படி கேட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த நபர் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, ரசாயனம் தடவிய ரூ. 50 ஆயிரத்தை அந்த நபரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், அந்த நபர் இன்று தாசில்தார் அலுவலகத்திற்கு வந்துள்ளார். குடும்ப சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்ட வருவாய் ஆய்வாளர் பூபால மகேஷ் அறைக்கு சென்ற அவர் ரசாயனம் தடவிய ரூ. 50 ஆயிரத்தை லஞ்சமாக கொடுத்துள்ளார். அதை வருவாய் ஆய்வாளர் மகேஷ் வாங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், லஞ்சம் வாங்கிய மகேசை கையும் களவுமாக பிடித்தனர். இதையடுத்து, வருவாய் ஆய்வாளர் மகேசை கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்