திருவனந்தபுரம்: 4.5 கிலோ தங்கம் கடத்த உதவிய சுங்கத்துறை இன்ஸ்பெக்டர் பணிநீக்கம்

திருவனந்தபுரத்தில் புலனாய்வுத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் 4.5 கிலோ தங்கம் கடத்தலுக்கு சுங்கத்துறை இன்ஸ்பெக்டரான அனீஷ் உதவி செய்தது தெரியவந்தது.;

Update:2025-08-10 09:39 IST

திருவனந்தபுரம்,

கேரளாவில் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு மற்றும் கண்ணூர் ஆகிய இடங்களில் சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. இந்த விமான நிலையங்கள் வழியாக தங்கம் கடத்தப்படுவதை தடுப்பதற்காக வருவாய் புலனாய்வுத்துறை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நாலரை (4.5) கிலோ தங்கம் கடத்துவதற்கு கடத்தல்காரர்களுக்கு உதவி செய்த சுங்கத்துறை இன்ஸ்பெக்டர் பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். 

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 4.5 கிலோ தங்கம் கடத்திய 2 பேரை வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கடத்தலுக்கு சுங்கத்துறை இன்ஸ்பெக்டரான அனீஷ் உதவி செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அனிசை வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அவரை பணிநீக்கம் செய்து அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்