இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 03-11-2025

Update:2025-11-03 09:48 IST
Live Updates - Page 2
2025-11-03 09:50 GMT

பாகிஸ்தான் மறைமுகமாக அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவதாக டிரம்ப் பரபரப்புத் தகவல்

ரஷியா, வட கொரியா, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் மறைமுகமாக அணு ஆயுத சோதனைகளில் ஈடுபடுகின்றன. ஆகையால்தான், அமெரிக்காவும் சோதனைகளை தொடங்க திட்டமிட்டுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார்.

2025-11-03 09:04 GMT

சிபிஐ அதிகாரிகள் சம்மன் கொடுக்க வந்தனர் - தவெக

கரூர் விவகாரத்தில் சிபிஐ அதிகாரிகள் சம்மன் கொடுக்க வந்தனர்.போட்டோ, சிசிடிவி உள்ளிட்ட வீடியோ ஆதாரங்களை ஒப்படைக்குமாறு கேட்டுள்ளனர் என தவெக நிர்வாகி நிர்மல் குமார் கூறினார்.

2025-11-03 08:29 GMT

தெலுங்கானா விபத்து: உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் - நிவாரணம் அறிவிப்பு

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தெலுங்கானா மாவட்டம் ரங்காரெட்டி மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்து சம்பவத்தால் மிகுந்த மனவேதனை அடைந்தேன். இந்த கடினமான சூழ்நிலையில் உறவினர்களை இழந்துவாடு குடும்பத்தினருடன் நான் துணை நிற்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உயிரிழந்துள்ளவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சமும், காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-11-03 07:49 GMT

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி சம்பவம்

ஆள் நடமாட்டமற்ற அப்பகுதிக்கு அப்போது வந்த 3 பேர் கொண்ட கும்பல் காரில் இருந்த கல்லூரி மாணவியின் ஆண் நண்பரை கடுமையாக தாக்கியுள்ளது. 3 பேர் கும்பல் தாக்கியதில் படுகாயமடைந்த ஆண் நண்பர் மயங்கியுள்ளார். பின்னர், கல்லூரி மாணவியை அப்பகுதியில் உள்ள மறைவான இடத்திற்கு தூக்கிச்சென்ற அந்த கும்பல் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.

2025-11-03 07:47 GMT

தெரு நாய்கள் வழக்கு: 7ம் தேதி தீர்ப்பளிக்கும் சுப்ரீம் கோர்ட்டு

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வுமுன் பல்வேறு மாநில தலைமை செயலாளர்கள் இன்று நேரில் ஆஜராகினர். அதன்பின்னர் மாநில அரசுகள் சார்பில் பிரமாண பத்திரங்களும் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து, அனைத்து பிரமாண பத்திரங்களையும் ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்நிலையில், மாநில அரசுகள் சார்பில் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தெரு நாய்கள் வழக்கில் வரும் 7ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. அன்றைய தினம் மாநில அரசுகளின் தலைமை செயலாளர்கள் ஆஜராக தேவையில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

2025-11-03 07:17 GMT

மகளிர் உலக கோப்பை வெற்றியை சக்கர நாற்காலியில் வந்து கொண்டாடிய பிரதிகா ராவல்

உலக கோப்பை தொடரில் காயம் காரணமாக பாதியில் வெளியேறிய பிரதிகா ராவல், சக்கர நாற்காலியில் வந்து இந்திய மகளிர் அணியினருடன் வெற்றியை கொண்டாடினர். பிரதிகா ராவல் இந்த உலக கோப்பையில் 6 போட்டிகளில் விளையாடி 308 ரன்கள் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2025-11-03 07:14 GMT

அதிமுகவிலும் குடும்ப அரசியல் உள்ளது; செங்கோட்டையன் குற்றச்சாட்டு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்குமுன் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழாவின் போது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை செங்கோட்டையன் சந்தித்து பேசினார்.

2025-11-03 07:11 GMT

சுகாதார ஆய்வாளர் பணி: 1,429 காலிப்பணியிடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?

கல்வி தகுதி: எஸ்.எஸ்.எல்.சி. அளவில் தமிழ் மொழியை ஒரு பாடமாக படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உயிரியல் அல்லது தாவரவியல்-விலங்கியல் பாடங்களை தேர்ந்தெடுத்து படித்து பிளஸ்-டூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ இயக்குநரால் வழங்கப்பட்ட இரண்டு வருட பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்)/ சுகாதார ஆய்வாளர்/ சுகாதார ஆய்வாளர் பாடநெறி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்