பணமோசடி வழக்கு; அனில் அம்பானியின் ரூ. 3 ஆயிரம் கோடி சொத்துக்கள் முடக்கம்
இந்தியாவில் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி. இவருக்கு சொந்தமான, 'ராகாஸ்' நிறுவனங்களுக்கு, 'யெஸ்' வங்கி 3,000 கோடி ரூபாய் கடன் வழங்கியது. ஒரு நிறுவனத்தின் பெயரில் பெற்ற கடன், சட்டவிரோதமாக மற்ற நிறுவனங்களுக்கு மாற்றம் செய்துள்ளதாக அனில் அம்பானி மீது குற்றச்சாட்டு எழுந்தது. விசாரணையில், அனில் அம்பானி ரூ.17 ஆயிரம் கோடி பண மோசடி செய்து விட்டதாக இரண்டு வழக்குகளை சி.பி.ஐ., பதிவு செய்தது.
இந்தியன் இன்ஸ்டிட்டியூட் ஆப் பெட்ரோலியம் அன்ட் எனர்ஜி; படிப்புகள் தொடர்பான விரிவான விவரங்கள்
மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் (Ministry of Petroleum and Natural Gas) சார்பில் உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனம் “இந்தியன் இன்ஸ்டிட்டியூட் ஆப் பெட்ரோலியம் அன்ட் எனர்ஜி” (Indian Institute of Petroleum and Energy) என்பதாகும். இந்த கல்வி நிறுவனம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 2016ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
இந்த நிறுவனம் இந்தியாவிலுள்ள முக்கிய எரிசக்தி நிறுவனங்களான – Shale Gas, Coal Bed Methane, Gas Hydrates, Conventional Energy Sources, Renewable Energy Sources போன்ற அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகிறது.
தவெகவில் தொண்டரணி, மாணவரணி, இளைஞரணி, மகளிரணிகளுக்கு நிர்வாகிகள் நியமனம்
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர களப்பணியில் இறங்கியுள்ளன.
தவெக தொண்டரணியில் முதற்கட்டமாக, பின்வரும் 64 கழக மாவட்டங்களுக்கு, மாவட்ட அளவிலான நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.
கேரள எக்ஸ்பிரஸ் ரெயிலில் கொடூரம்; குடிபோதையில் பெண்களை உதைத்து வெளியே தள்ளிய நபர்
புதுடெல்லியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற கேரள எக்ஸ்பிரஸ் ரெயில், கேரளாவின் வர்கலா ரெயில் நிலையத்திற்கு நேற்றிரவு வந்து சேர்ந்தது. இதன்பின்னர் இரவு 8.30 மணியளவில் வர்கலா ரெயில் நிலையத்தில் இருந்து அந்த ரெயில் புறப்பட்டு சென்றது.
அப்போது பொது பெட்டியில் ஆலுவா பகுதியில் 2 பெண்கள் ஏறியுள்ளனர். அவர்கள் கழிவறைக்கு சென்று விட்டு வெளியே வந்தனர். அப்போது, சுரேஷ் குமார் என்பவர் ரெயிலின் கதவு அருகே நின்று கொண்டு இருந்துள்ளார். அவர் திடீரென அவர்களை கடுமையாக தாக்க தொடங்கினார்.
ஆப்கானிஸ்தானில் கடுமையான நிலநடுக்கம்: 10 பேர் பலி; 260 பேர் காயம் - வைரலான வீடியோ
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலீபான் பாதுகாப்பு அமைச்சகம் கூறும்போது, பால்க் மற்றும் சமங்கன் மாகாணங்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால், எண்ணற்றோர் பலியாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது என தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து, ராணுவத்தின் மீட்பு மற்றும் அவசரகால உதவி குழுக்கள் உடனடியாக சென்று மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காயமடைந்த நபர்களை சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அமெரிக்காவின் புவியியல் அமைப்பு ஆரஞ்சு அலர்ட்டுக்கான எச்சரிக்கையை வெளியிட்டு உள்ளது. இதனால், 10 பேர் பலியாகி உள்ளனர். 260 பேர் காயம் அடைந்துள்ளனர்.
தெரு நாய்கள் தொடர்பான வழக்கு; தமிழக தலைமை செயலாளர் சுப்ரீம் கோர்ட்டில் நேரில் ஆஜர்
தெரு நாய் தொல்லை விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதில் தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்து பிடித்த இடத்திலேயே விடுவிக்க கடந்த ஆகஸ்டு மாதம் உத்தரவிட்டு இருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் இணக்க அறிக்கையை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யவும் அறிவுறுத்தி இருந்தது. அதன்படி மேற்கு வங்காளம், தெலுங்கானா மற்றும் டெல்லி மாநில அரசுகள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தன.
தங்கம் விலை உயர்வு... இன்றைய நிலவரம் என்ன..?
தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.320-ம், சவரனுக்கு ரூ.2,560-ம் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,350-க்கும், சவரன் ரூ.90,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல, வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. அதாவது, கிராமுக்கு ரூ.2 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.168க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தெலுங்கானா: அரசு பஸ் மீது லாரி மோதி 24 பேர் பலி
தெலுங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் செவல்லா காவல் நிலையத்திற்கு உட்பட்ட கானாப்பூர் கேட் பகுதியில் இன்று காலை அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில், 15-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்நிலையில், பஸ் மீது டிப்பர் லாரி ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில், பஸ்சில் இருந்த 24 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர். பாரதீய ராஷ்டீரிய சமிதியின் தலைவரான தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் இந்த விபத்துக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். உரிய இழப்பீடு வழங்கவும் வலியுறுத்தி உள்ளார்.
5 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தற்காலிக பெட்டிகள் இணைப்பு; தெற்கு ரெயில்வே அறிவிப்பு
பயணிகளின் வசதிக்காக தாம்பரம்-செங்கோட்டை, தாம்பரம்-நாகர்கோவில், சென்டிரல்-திருவனந்தபுரம், சென்டிரல்-ஆழப்புலா, கோவை-ராமேசுவரம் ஆகிய ரெயில்களில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
35 இந்திய மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை நடவடிக்கை
தமிழகம் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த இலங்கை கடற்படையை சேர்ந்தவர்கள் தடுத்து நிறுத்தினர். எல்லை தாண்டி மீன்பிடித்தனர் என கூறி மீனவர்கள் 35 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 3 விசைப்படகுகள், ஒரு நாட்டுப்படகு ஆகியவற்றையும் கடற்படையினர் பறிமுதல் செய்தனர். நாட்டுப்படகில் இருந்த 4 மீனவர்கள், 3 விசைப்படகுகளில் இருந்த 31 பேர் என மொத்தம் 35 மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு இலங்கை கடற்படையினர் அழைத்து சென்றனர்.