கவர்னர் - அரசு மோதலால் மக்கள் பாதிப்பு - சுப்ரீம் கோர்ட்டு
கவர்னர் - தமிழக அரசு இடையிலான மோதல் போக்கால் மக்களுக்கே பாதிப்பு என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக, வாணியம்பாடியைச் சேர்ந்த செந்தில் குமார் என்பவரை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்தனர்.
கர்நாடகாவில் காது குத்துவதற்கு மயக்க ஊசி போடப்பட்டதால், 6 மாத ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மருத்துவரின் கவனக்குறைவால் குழந்தை உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும் என்று தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி : குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைக்க நிலம் எடுக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்ற 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கால்நடைகளை வாகனங்களில் ஏற்றி செல்ல கட்டுப்பாடு: உயர் நீதிமன்றம்
*கால்நடைகள் உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கிறதா என பரிசோதனை நடத்திய பிறகே அவற்றை ஏற்றிச் செல்ல வேண்டும்
*முறையான ஆவணங்களுடன் மட்டுமே கால்நடைகளை கொண்டு செல்ல வேண்டும்
*லாரிகளில் கால்நடைகள் நிற்க போதுமான இடவசதியுடன் கொண்டு செல்ல வேண்டும்
*முறையான காற்று வசதியுடன், உணவு, குடிநீர் வழங்க வேண்டும்
*கேரளாவுக்கு கடத்தப்பட்டதாக பறிமுதல் செய்யப்பட்ட 117 கால்நடைகளை ஒப்படைக்க கோரிய வழக்கு தள்ளுபடி
வரும் 11ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
11 ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி பாம்பன் பாலத்தை திறக்க உள்ளார். மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படை நிலையத்தில் இருந்து கப்பல் மூலம் பிரதமர் மோடி பாம்பன் வருகிறார். அங்கிருந்து கப்பலில் சென்று பழைய பாலம் மற்றும் புதிய பாலத்தை பார்வையிடுகிறார். பின்னர், புதிய ரயில் பாலத்தை கொடியசைத்து போக்குவரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி,
அந்த ரயிலில் பயணம் செய்யும் வகையிலும் நிகழ்ச்சி திட்டமிடப்பட்டு உள்ளது. பிரதமர் மோடியின் வருகையையொட்டி, அவரது பாதுகாப்புத்துறை அதிகாரிகள், ஓரிரு நாட்களில் மண்டபம், ராமேஸ்வரம் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளனர்.
*ஆளுநருக்கு எதிரான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையீடு
*ஆளுநருக்கு எதிரான வழக்கு இன்று பிற்பகல் 3 மணிக்கு விசாரிக்கப்படும் - உச்சநீதிமன்றம் அறிவிப்பு
சென்னையில் சாலையில் கிடந்த ஏகே 47 துப்பாக்கி
சென்னை ராமாபுரத்தில் சாலையில் கிடந்த ஏகே 47 துப்பாக்கியால் அதிர்ச்சி
30 தோட்டாக்களும் கிடந்ததால் பரபரப்பு
மியாட் மருத்துவமனை சிக்னல் அருகே சாலையில் கிடந்த துப்பாக்கி, தோட்டா மீட்பு
சிவராஜ் என்பவர் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு - போலீசார் தீவிர விசாரணை