இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில் 04-02-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

Update:2025-02-04 09:08 IST


Live Updates
2025-02-04 13:48 GMT

கேரளா : திருச்சூர் அருகே கோயில் நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. மிரண்டு ஓடிய யானை தாக்கியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

2025-02-04 13:07 GMT

புதுக்கோட்டை அருகே பொற்பனைக்கோட்டை அகழாய்வில், நெசவுக்கு பழந்தமிழர்கள் பயன்படுத்திய 'எலும்பு முனைக் கருவி' கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

2025-02-04 13:05 GMT

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட்டுள்ளார். 

2025-02-04 12:58 GMT

வனத்துறையில் காலியாக உள்ள 72 பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 34 வரைவாளர், 38 இளநிலை வரைவு தொழில் அலுவலர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன.

2025-02-04 11:46 GMT

சாமானிய, நடுத்தர மக்களை முன்னேற்றிக்கொண்டு வந்துள்ளது பாஜக அரசு என்று மக்களவையில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

2025-02-04 11:27 GMT

மராட்டியத்தில் அரசு அலுவலகங்களில் மராத்தி மொழியில்தான் உரையாடல்கள் இருக்க வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வெளிமாநிலத்தவர், வெளிநாட்டவர்களுடன் மட்டும் பொதுவான தொடர்பு மொழியில் பேசிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-02-04 11:23 GMT

40 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையின் அடையாளமாக திகழ்ந்த உதயம் தியேட்டரை ஜேசிபி இயந்திர உதவியுடன் இடிக்கும் பணி தொடங்கியது.

2025-02-04 11:10 GMT

‘கலைஞர் கருவூலம்’ என்ற சிறப்பு இணையதளத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். www.tamildigitallibrary.in/kalaignar கலைஞரின் இலக்கியம், இதழியல், உரைகள், திரைப்படங்கள், காலப்பேழை என்ற பிரிவுகளில் அனைத்து படைப்புகளும் PDF வடிவில் இணைக்கப்பட்டுள்ளன.

2025-02-04 10:43 GMT

திருப்பூர் பழவஞ்சிபாளையத்தில் உள்ள கெமிக்கல் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் 2 மணி நேரத்துக்கும் மேல் போராடி தீயை கட்டுப்படுத்தினர். தீப்பற்றிய குடோனில் இருந்தவர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.  

2025-02-04 10:05 GMT

அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் முதல் தகவல் அறிக்கை வெளியான விவகாரம்: பத்திரிகையாளர்களை துன்புறுத்தக்கூடாது என காவல் துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பத்திரிக்கையாளர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அதனை திரும்ப ஒப்படைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்