இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில் 04-02-2025

Update:2025-02-04 09:08 IST
Live Updates - Page 3
2025-02-04 04:16 GMT

டாடா ஸ்டீல் செஸ் தொடரில் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

"இந்த அற்புதமான சாதனை அவரது திறமை, அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை எடுத்துக்காட்டுகிறது ; இத்தகைய மதிப்புமிக்க நிகழ்வில் அவர் பெற்ற வெற்றி அவரது திறமை மற்றும் உறுதிப்பாட்டின் உண்மையான பிரதிபலிப்பாகும்"- உதயநிதி ஸ்டாலின்

2025-02-04 04:06 GMT

*சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்வு

*ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.7,810க்கும் சவரன் ரூ.62,400 க்கும் விற்பனை

2025-02-04 03:44 GMT

கிரீஸின் (Santorini) சாண்டோரினி என்ற எரிமலை தீவிற்கு அருகே, கடலுக்கு அடியில் 200 முறைக்கும் மேல் பதிவான நிலநடுக்கம்...

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் வெளியேற்றம்

2025-02-04 03:41 GMT

அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள இந்தியர்களை ஏற்றிக்கொண்டு சி-17 ராணுவ விமானம் புறப்பட்டுள்ளது. எனினும், இந்த விமானத்தில் எத்தனை பேர் பயணம் செய்கிறார்கள் என்ற விவரம் வெளியாகவில்லை. அமெரிக்காவில் கிட்டத்தட்ட 7 லட்சத்து 25 ஆயிரம் இந்தியர்கள் உரிய ஆவணம் இன்றி வசிப்பதாக சொல்லப்படுகிறது.

2025-02-04 03:40 GMT

திரு​ப்பரங்குன்றத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருவதால் திருப்பரங்குன்றம் மலை மீது ஏறி வழிபாடு செய்ய தடை

திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த இந்து முன்னணி அமைப்பினர் திட்டமிட்டிருந்த நிலையில் காவல் துறை நடவடிக்கை

Tags:    

மேலும் செய்திகள்