இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்..12-05-2025

Update:2025-05-12 09:08 IST
Live Updates - Page 4
2025-05-12 04:12 GMT

தங்கம் விலை அதிரடியாக குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்து ரூ.71,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.165 குறைந்து ஒரு கிராம் ரூ.8,880-க்கு விற்பனையாகிறது.

2025-05-12 04:02 GMT

இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில் பங்குச்சந்தையில் எழுச்சி ஏற்பட்டுள்ளது. மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 1,800 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து 81 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் வர்த்தகம் ஆகிறது.

2025-05-12 03:40 GMT

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,

“தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும் அஇஅதிமுக பொதுச்செயலாளாருமான, அண்ணன் எடப்பாடி பழனிசாமிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். எடப்பாடி பழனிசாமி நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தனது மக்கள் பணிகள் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்