இந்தியாவை அவமதிக்கும் டிரம்ப்; அரசு மவுனம் காப்பது ஏன்? காங்கிரஸ் கேள்வி
ரூ.182 கோடி நிதியுதவி நிறுத்தப்பட்ட விவகாரத்தில் டிரம்ப் தொடர்ந்து இந்தியாவை அவமதித்து வரும் நிலையில் அரசு மவுனம் காப்பது ஏன் என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.;
புதுடெல்லி,
அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த மாதம் பொறுப்பேற்ற டிரம்ப், பல்வேறு சிக்கன நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் அந்த வகையில் ஓட்டு சதவீதத்தை அதிகரிப்பதற்காக இந்தியாவுக்கு வழங்கப்பட்டு வந்த 21 மில்லியன் டாலர் (சுமார் ரூ.182 கோடி) நிதியுதவி நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியானது. அதுமட்டும் இன்றி முந்தைய ஜோ பைடன் அரசில் இந்தியாவுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டது குறித்து அவர் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்.
இந்த நிலையில் நிதியுதவி நிறுத்தப்பட்ட விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், எலான் மஸ்க்கும் இந்தியாவை அவமதிக்கும்போது அரசு ஏன் அமைதியாக இருக்கிறது என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், டிரம்பும், எலான் மஸ்க்கும் இந்தியாவை மீண்டும் மீண்டும் அவமதித்து வருகிறார்கள். ஏன் நமது அரசு இதில் மவுனம் காக்கிறது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.