மராட்டியத்தில் பஸ்கள் மோதி விபத்து - 2 பேர் பலி

மராட்டிய மாநிலம் லத்தூர் மாவட்டத்தில் ஏற்பட்ட இந்த விபத்தில் 11 பேர் காயமடைந்தனர்.;

Update:2025-05-29 21:57 IST

தானே,

மராட்டிய மாநிலம் துல்ஜாபூர்-லத்தூர் நெடுஞ்சாலையில் தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுகொண்டிருந்தது. அதிகாலை 5 மணியளவில் அவுசா தாலுகாவில் உள்ள உஜ்னி அருகே சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால் சாலையில் முன்னால் சென்ற பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ் சாலையில் கவிழ்ந்தது. விபத்தில் நம்தேவ் சூர்யவன்ஷி (வயது 40) மற்றும் நிதின் தேவர்சே (35) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 11 பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பு வைத்தனர். விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்