கேரளாவில் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் இருவர் தூக்குப்போட்டு தற்கொலை

கேரளாவில் 10 ஆம் வகுப்பு மாணவ, மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.;

Update:2025-03-15 19:23 IST

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் இன்று மட்டும் தனித்தனி சம்பவங்களில் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் இருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அட்டிங்கலில் உள்ள தனது வீட்டில் 15 வயது சிறுவன் அறையின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதே நேரத்தில் அருகிலுள்ள மாரநல்லூரில் உள்ள அதே வயதுடைய பெண் ஒருவர் மின்விசிறி கொக்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவர்களின் உடலை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு இடையே இந்த சம்பவங்கள் நடந்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்