ஒடிசா: மின்னல் தாக்கி 2 பேர் பலி

திடீரென இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.;

Update:2025-07-08 00:17 IST

புவனேஷ்வர்,

ஒடிசா மாநிலம் பத்ரக் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், அம்மாவட்டத்தின் சந்தசாலி கிராமத்தை சேர்ந்த மதன் மஹ்ரானா (வயது 60), ஹர்தானந்தா மஹ்ரானா (வயது 57) இருவரும் தங்கள் நிலத்தில் நேற்று விவசாய பணி செய்துகொண்டிருந்தனர்.

அப்போது, திடீரென இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது விவசாய பணி செய்துகொண்டிருந்த 2 பேர் மீதும் மின்னல் தாக்கியது. இதில் 2 பேரும் படுகாயமடைந்தனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மதன், ஹர்தானந்தாவை பரிசோதித்த டாக்டர்கள், 2 பேரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  அதேபோல், அம்மாவட்டத்தின் சார்பிதா கிராமத்தில் மின்னல் தாக்கி கிரித்ஹரி (வயது 64) படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

Tags:    

மேலும் செய்திகள்