ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டரில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை

குல்காமில் நடந்த என்கவுண்டரில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.;

Update:2025-09-08 20:02 IST

ஜம்மு,

ஜம்மு காஷ்மீர் குல்காம் மாவட்டத்தில் குட்டர் வனப் பகுதிகளில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர்,ஜம்மு காஷ்மீர் போலீஸ் மற்றும் சி.ஆர்.பி.எஃப் இணைந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.அப்போது பயங்கரவாதிகளின் இருப்பிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. அங்கு பாதுகாப்புப்படையினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிசூட்டைத் தொடர்ந்து இந்திய ராணுவம் அவர்களுக் தக்க பதிலடி கொடுத்தது.

இந்தச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 3 வீரர்கள் காயமடைந்தனர். தேடுதல் வேட்டை தொடர்வதாக அதிகரிகள் தெரிவித்தனர். ராணுவத்துடனான துப்பாக்கிச்சண்டையில் கொல்லப்பட்ட இரண்டு பயங்கரவாதிகளின் அடையாளம் தெரியவில்லை. அது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்