திருமண ஊர்வலத்தின்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து - 2 பேர் பலி
விபத்தை ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனத்தைக் கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.;
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் ஹமீர்பூரில் திருமண ஊர்வலம் நடைபெற்றது. இன்று அதிகாலை நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் பலர் கலந்துகொண்டனர். இந்த ஊர்வலமானது கல்பியில் இருந்து சுமேர்பூரில் உள்ள தேவ்கான் நோக்கி சென்றுகொண்டிருந்தது.
அப்போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று, ஊர்வலத்தில் சென்றுகொண்டிருந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனத்தைக் கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.