பல்கலைக்கழக விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை

ஆசிரியர்கள் மகேந்தர், ஷைரி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2025-07-19 16:06 IST

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் தனியார் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் குருகிராமை சேர்ந்த ஜோதி சர்மா என்ற மாணவி 2ம் ஆண்டு பல் மருத்துவ பட்டப்படிப்பு படித்து வந்தார்.

இதனிடையே, ஜோதி சர்மாவுக்கு பல்கலைக்கழ ஆசிரியர்களான மகேந்தர், ஷைரி ஆகியோர் மனரீதியில் தொல்லை கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், ஆசிரியர்களின் மனரீதியிலான தொல்லையால் விரக்தியடைந்த ஜோதி சர்மா நேற்று இரவு பல்கலைக்கழக விடுதியில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலை செய்வதற்குமுன் மாணவி எழுதி வைத்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தின் அடிப்படையில் ஆசிரியர்கள் மகேந்தர், ஷைரி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அதேவேளை, மாணவி தற்கொலை சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழகத்தில் மாணவ,மாணவியர் போராட்டத்தில் ஈடுபடனர். 

Tags:    

மேலும் செய்திகள்