போதைப்பொருள் கடத்திய இந்திய வணிக அதிகாரிகளின் அமெரிக்க விசாக்கள் ரத்து

போதைப்பொருள் கடத்திய இந்திய வணிக அதிகாரிகளின் அமெரிக்க விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.;

Update:2025-09-20 00:57 IST

புதுடெல்லி,

இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம், குறிப்பிட்ட போதைப் பொருட்களை கடத்தியதாக இந்திய வணிக அதிகாரிகள் மற்றும் பெரிய நிறுவன தலைவர்கள் சிலரின் விசாக்களை ரத்து செய்து உள்ளது. இந்த தகவலை பகிர்ந்த அமெரிக்க தூதரகம், அந்த வணிக தலைவர்களின் பெயர்களை வெளியிடவில்லை.

சக்திவாய்ந்த செயற்கை போதைப் பொருட்களில் ஒன்று பெண்டானில். இதை உட்கொள்வதால் அதிக போதையும், அதிகப்படியான இறப்புகளும் ஏற்படுவதாக அமெரிக்காவில் அறிக்கைகள் வெளியாகி உள்ளன.

இதையடுத்து தேச நலன் கருதி, இந்த போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி மேற்படி இந்திய வணிக தலைவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதன் மூலம் அவர்களோ, அவர்களது குடும்பத்தினரோ இனி அமெரிக்கா செல்ல முடியாது.

Tags:    

மேலும் செய்திகள்