வைகுண்ட ஏகாதசி; திருப்பதியில் ரூ.300 கட்டண சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு ஒத்திவைப்பு
தரிசன டிக்கெட்டுகள் வெளியீட்டுக்கான புதிய அட்டவணையை தேவஸ்தானம் விரைவில் அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.;
திருப்பதி,
திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
“திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற டிசம்பர் மாதம் வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. அதை முன்னிட்டு டிசம்பர் மாதம் 29, 30, 31-ந்தேதிகளுக்கான ரூ.300 கட்டண சிறப்பு தரிசன டிக்கெட்டுகள், ஸ்ரீவாணி அறக்கட்டளை பிரேக் தரிசனத்துக்கான டிக்கெட்டுகள் வெளியிடப்பட மாட்டாது. அந்தத் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடும் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தரிசன டிக்கெட்டுகள் வெளியீட்டுக்கான புதிய அட்டவணையை திருப்பதி தேவஸ்தானம் விரைவில் அறிவிக்கும். இதை, பக்தர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.