பனிமூட்டத்தால் வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்- லாரி டிரைவர் பலி

ரெயில்வே கிராசிங் கேட் மூடப்பட்டிருந்தபோது காத்திருந்த வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின.;

Update:2025-01-19 13:17 IST

கோப்பு படம்

அமேதி:

உத்தர பிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தில், கடுமையான பனிமூட்டம் காரணமாக வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இன்று அதிகாலை 4 மணியளவில் கமரவுலி ரெயில்வே கிராசிங் மூடப்பட்டபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. முதலில் கிராசிங்கில் காத்திருந்த ஒரு கார் மீது லாரி மோதியது. பின்னால் வந்த 5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதின. இதில் லாரி டிரைவர் உயிரிழந்தார். 2 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்து தொடர்பாக கமரவுலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த லாரி டிரைவரின் பெயர் ரோகித் பாண்டே (வயது 30) என்பதும், அவர் அமேதி மாவட்டம் ஜாயிஸ் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்