கள்ளக்காதலால் ஏற்பட்ட விபரீதம்.. இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

வீட்டில் தனியாக இருந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது;

Update:2025-04-09 04:25 IST

பெங்களூரு,

பெங்களூரு ஹெப்பால் போலீஸ் எல்லைக்குட்பட்ட கனகநகர் பகுதியை சேர்ந்தவர் பஷிர்(வயது 33). இவர் விமான நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பாஹர் அஸ்மா(29). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 2 பேருக்கும் திருமணம் முடிந்தது. குழந்தைகள் இல்லை என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் பஷிருக்கும், ஹெப்பாலை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த அஸ்மா, தனது கணவரை கண்டித்தார். ஆனால் அவர் கள்ளக்காதலை கைவிடவில்லை. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. குடும்பத்தினர் தலையிட்டு 2 பேரையும் சமாதானம் செய்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் கணவர் வெளியே சென்றிருந்தபோது, வீட்டில் தனியாக இருந்த அஸ்மா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் அஸ்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பஷிர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்