லிப்ட் கொடுப்பது போல் நடித்து ஓடும் காரில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்
சம்பவத்துடன் தொடர்புடைய நிதினை 3 மாதங்களாக அந்த இளம்பெண்ணுக்கு தெரியும் என கூறப்படுகிறது.;
பண்டா,
உத்தர பிரதேசத்தின் லலித்பூர் மாவட்டத்தில் 18 வயது இளம்பெண் ஒருவர், உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம் ஒன்றை பூர்த்தி செய்து விட்டு சாலையில் நடந்து வந்து கொண்டு இருந்துள்ளார். அப்போது, நிதின் தாக்குர் (வயது 22) என்பவர் அந்த வழியே காரில் வந்து லிப்ட் கொடுக்க முன் வந்துள்ளார்.
இதனை நம்பி அந்த இளம்பெண்ணும் காரில் ஏறியுள்ளார். அவரை அழைத்து கொண்டு, உரிய இடத்தில் இறக்கி விடுவதற்கு பதிலாக, அணைக்கட்டு அமைந்த பகுதியில், மறைவான இடத்திற்கு காரில் அழைத்து சென்ற நிதின், மற்றொரு நபருடன் சேர்ந்து, ஓடும் காரிலேயே கூட்டு பலாத்காரம் செய்துள்ளார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய நிதினை 3 மாதங்களாக அந்த இளம்பெண்ணுக்கு தெரியும் என கூறப்படுகிறது. நிதின் மற்றும் அடையாளம் தெரியாத நபருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது என கூடுதல் போலீஸ் சூப்பிரெண்டு காலு சிங் கூறியுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.