தவெகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன்

த..வெ.க. செயல் வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.;

Update:2026-01-25 15:24 IST

சென்னை,

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. சட்டசபை தேர்தலை சந்திக்க நடிகர் விஜய் தொடங்கிய கட்சியான தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாக இறங்கியுள்ளது. அதன்படி விஜய் நடத்தி வரும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

ஆளுங்கட்சியான தி.மு.க.வும், ஆண்ட கட்சியான அ.தி.மு.க.வும் பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், நடிகர் விஜய்யோ, சாத்தியமான திட்டங்களை மட்டுமே மக்களுக்காக நிறைவேற்றுவோம் என்று கூறியிருக்கிறார்.

இதனிடையே கடந்த சில நாட்களாக பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டங்கள் நடந்து வருகிறது. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு மற்றும் தேர்தல் பிரசார குழு கூட்டங்கள் நடந்தன. இந்த நிலையில், மாமல்லபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் த..வெ.க. செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விஜய் பங்கேற்றார்.

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இன்று இணைந்தார். அவருக்கு கட்சியின் அடையாள அட்டையை விஜய் வழங்கினார். மேலும் கு.ப.கிருஷ்ணனுக்கு தவெக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த இவர் கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்