தவெகவுடன் ராமதாஸ் கூட்டணி பேச்சுவார்த்தை?

டாக்டர் ராமதாசின் (பாமக) இன்னும் கூட்டணியை இறுதி செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது.;

Update:2026-01-27 09:45 IST

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 2 மாத கால இடைவெளியே இருக்கின்றன. ஆளுங்கட்சியான தி.மு.க. தலைமையில் ஒரு அணி, ஆண்ட கட்சியான அ.தி.மு.க. தலைமையில் மற்றொரு அணி, த.வெ.க. தலைமையில் இன்னொரு அணி, சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி என 4 முனைப்போட்டி நிலவுகிறது.

தி.மு.க. பலம் வாய்ந்த கூட்டணியுடன் களம் காண இருக்கிறது. எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும், மத்தியில் ஆளும் கட்சியான பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணியில், அன்புமணியின் (பா.ம.க.), அ.ம.மு.க., த.மா.கா., புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்பட சிறிய கட்சிகளும் பல இணைந்துள்ளன.

தேமுதிக, டாக்டர் ராமதாசின் (பாமக) இன்னும் கூட்டணியை இறுதி செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது. அதாவது, ஆளுங்கட்சியான தி.மு.க.வுடனும் தேமுதிக, பாமக கூட்டணி பேச்சு வார்த்தையை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணிக்குள் ராமதாஸ் வருவதற்கு திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், அதிமுக கூட்டணியிலும் ராமதாஸ் தரப்பை சேர்க்கக்கூடாது என அன்புமணி நிபந்தனை என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ஓரிரு நாட்களில் செங்கோட்டையன் மூலம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அரசியல் பரபரப்பாக காணப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்