இலங்கை கடற்படை படகு மோதி கடலில் விழுந்த தமிழக மீனவர்கள் 4 பேர் மாயம்
இலங்கை கடற்படை படகு மோதி கடலில் விழுந்த தமிழக மீனவர்கள் 4 பேர் மாயமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.;
கோப்புப்படம்
ராமேஸ்வரம்,
இலங்கை கடற்படை ரோந்து படகு மோதி ராமேஸ்வரம் விசைப்படகு நடுக்கடலில் மூழ்கி மீனவர்கள் மாயமாகி உள்ளனர். நள்ளிரவு மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது ரோந்து படகு மோதி ராமேஸ்வரம் மீனவர்களின் படகு மூழ்கியதாக கூறப்படுகிறது. படகு நடுக்கடலில் மூழ்கியதில் படகில் இருந்த 4 ராமேஸ்வரம் மீனவர்கள் நிலை என்ன என்பது தெரியவில்லை.
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சென்ற கார்த்திகேயன் என்பவரின் விசைப்படகு நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. 4 மீனவர்களின் நிலை குறித்து விசைப்படகு உரிமையாளர் மீன்வளத்துறை அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளநிலையில் இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.