விஷ சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கமல்ஹாசன் நேரில் ஆறுதல்

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து கமல்ஹாசன் ஆறுதல் கூறினார்;

Update:2024-06-23 13:50 IST

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த 18ம் தேதி விஷ சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. இதில் பாதிக்கப்பட்டவர்கள் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 56 ஆக அதிகரித்துள்ளது .

இந்த நிலையில் விஷ சாராயம் குடித்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கமல்ஹாசன் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்