சென்னையில் பைக் ரேசில் ஈடுபட்ட 10 பேர் கைது

சென்னையில் இரவு நேரங்களில் இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபடும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன;

Update:2025-05-26 21:17 IST

சென்னையில் முக்கிய சாலைகளில் இரவு நேரங்களில் இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபடும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. சாலைகளில் பைக்கில் அதிவேகமாக செல்லும் இளைஞர்களால் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.

குறிப்பாக, வார இறுதி நாட்களில் பைக் ரேசில் ஈடுபடுகின்றனர். இந்த ரேஸ் தொடர்பாக இன்ஸ்டாகிராமில் இந்த நேரத்தில், இந்த இடத்தில் ரேஸ் நடப்பதாக ஸ்டோரி வைத்து அதை பார்த்து பலரும் ஒன்று கூடி ரேசில் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில், இந்த பைக் ரேஸ் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 100க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பைக் ரேசில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் உள்பட 10 இளைஞர்களை இன்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞர்களிடமிருந்து 9 பைக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், பைக் ரேசில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள எஞ்சிய இளைஞர்களின் விவரம் குறித்தும் சேகரித்த அண்ணா நகர் போலீசார் அவர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்