குடியரசு தினம்: சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
குடியரசு தினத்தை முன்னிட்டு எழும்பூர் - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரெயிலை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.;
சென்னை,
குடியரசு தினத்தை முன்னிட்டு ஏற்படும் கூடுதல் பயணிகள் கூட்டத்தைக் கையாள, சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06135) 23ம் தேதி (நாளை) இரவு 11.45 மணிக்கு எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, அடுத்த நாள் மதியன் 1 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.
மறுமார்க்கத்தில், கன்னியாகுமரியில் இருந்து சென்னை கடற்கரைக்கு செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06136) வருகிற 26ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து இரவு 9.35 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 10.15 மணிக்கு சென்னை கடற்கரை வந்து சேரும்.
ரெயில் பெட்டி அமைப்பு: 18 - ஏசி மூன்று அடுக்கு பெட்டிகள்
இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்றே தொடங்குகிறது.