குஜராத் கடற்கரை பகுதியில் எல்லை தாண்டி வந்த 15 பாகிஸ்தான் மீனவர்கள் கைது

கைதான மீனவர்கள் பாகிஸ்தான் நாட்டின் சிந்தி மாகாணத்தில் உள்ள சுஜாவல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.;

Update:2025-08-24 19:58 IST

கட்ச்,

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள இந்தியா- பாகிஸ்தான் எல்லைக்கு அருகே கடல் பகுதியில் பாகிஸ்தானை சேர்ந்த சிலர் இருப்பதாக எல்லை பாதுகாப்புபடை வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் அந்த பகுதிக்கு விரைந்தனர்.

அப்போது ​​15 பாகிஸ்தான் மீனவர்கள் எல்லை தாண்டி நாட்டு படகில் இந்திய பகுதியில் நுழைந்தது தெரியவந்தது. உடனடியாக எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அவர்கள் வந்த நாட்டு படகையும் பறிமுதல் செய்தனர்.

படகில் இருந்த 60 கிலோ மீன்கள், 9 மீன்பிடி வலைகள், மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது.கைது செய்யபட்ட மீனவர்கள் பாகிஸ்தான் நாட்டின் சிந்தி மாகாணத்தில் உள்ள சுஜாவல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்