தூத்துக்குடியில் மூதாட்டியிடம் நகை பறித்த 2 பேர் கைது: 15 சவரன் நகை மீட்பு

தூத்துக்குடியில் வீடுபுகுந்து மூதாட்டியை தாக்கி 15 சவரன் தாலிச் செயின், 4 சவரன் வளையல் என 19 சவரன் நகைகளை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.;

Update:2025-04-13 13:18 IST

தூத்துக்குடி பிரையன்ட்நகர் 2-வது தெருவைச் சேர்ந்த தங்கராஜ், தனியார் மில்லில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் கடந்த 1-ம் தேதி காலையில் வாக்கிங் சென்றபோது, வீட்டில் அவரது மனைவி முனியம்மாள் (வயது 82) மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் வீடு புகுந்து முனியம்மாளை கீழே தள்ளி அவர் கழுத்தில் அணிந்திருந்த 15 சவரன் தாலிச் செயின் மற்றும் கைகளில் அணிந்திருந்த 4 சவரன் வளையல் என 19 சவரன் நகைகளை பறித்துச் சென்றனர்.

இதுகுறித்து தூத்துக்குடி, தென்பாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். ஏ.எஸ்.பி. மதன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, ஏட்டுகள் பாலசுப்பிரமணியன், அமிர்தராஜ், சரண், சரவணகுமார், பிரகாஷ் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர்.

மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, பிரையன்ட்நகர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த காசி பாண்டியன் மகன் மருதுபாண்டி(எ)துரை (வயது 32), ஜெயபால் மகன் ஜெலஸ்டின் (வயது 35) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்து 15 சவரன் தாலிச் செயினை போலீசார் மீட்டனர். மேலும் இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்