திருநெல்வேலியில் ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது: பைக் பறிமுதல்
மணிமுத்தாறு அருகே அயன்சிங்கம்பட்டி பகுதியில் ராமையாவின் மகன் ஆடுகளை குளிப்பாட்ட சென்ற போது ஒரு ஆட்டை மட்டும் காணவில்லை.;
திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு, அயன்சிங்கம்பட்டி, மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராமையா (வயது 50) விவசாயம் செய்து ஆடு வளர்ப்பு தொழில் செய்து வருகிறார். இந்ந நிலையில் இன்று ராமையாவின் மகன் ஆடுகளை குளிப்பாட்ட சென்ற போது ஒரு ஆட்டை மட்டும் காணவில்லை.
இதுகுறித்து ராமையா மணிமுத்தாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அதில் வீரவநல்லூரைச் சேர்ந்த பூமிநாதன்(35), சண்முகம்(30) ஆகிய இருவரும் ஆட்டை திருடிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் அவர்கள் 2 பேரையும் இன்று கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்து ஒரு ஆட்டையும், ஒரு பைக்கையும் பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.