நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பெயரில் ரூ.20 லட்சம் மோசடி....அரியானா இளைஞர் கைது

ரூ. 20 லட்சம் மோசடி செய்த புகாரில் அரியானாவை சேர்ந்த இளைஞரை நீலகிரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.;

Update:2025-06-18 10:16 IST

நீலகிரி,

பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தியின் ஓட்டல் மேலாளரிடம், அவரைப் போலவே மெசேஜ் அனுப்பி ரூ. 20 லட்சம் மோசடி செய்த புகாரில் அரியானாவை சேர்ந்த ரவீன்குமார் என்பவரை நீலகிரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம், மிதுன் சக்கரவர்த்தி பெயரில் உதகையில் உள்ள அவருடைய ஓட்டல் மேலாளரின் செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், சிக்னல் பிரச்சினை இருப்பதாகவும், ஓட்டல் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை ஒரு குறிப்பிட்ட கணக்கிற்கு அனுப்புமாறும் கேட்கப்பட்டு இருந்திருக்கிறது.

இதை நம்பிய மேலாளர், ரூ.20 லட்சத்தை ஆன்லைன் மூலம் அனுப்பி வைத்து விட்டு, மறுநாள் மிதுன் சக்கரவர்த்தியை தொடர்பு கொண்டபோதுதான் இது மோசடி என்று தெரியவந்திருக்கிறது.

இதுகுறித்து ஓட்டல் மேலாளர் அளித்த புகாரின்பேரில் நீலகிரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தபோது, அரியானாவை சேர்ந்த ரவீன்குமார் என்பவர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து, அவரைக் கைது செய்து, அவரிடமிருந்து 6 லட்சத்து 95 ஆயிரம் ரூபாயை மீட்டனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்