தமிழகத்தில் 2.11 லட்சம் வாக்குச்சாவடி நிலைமுகவர்கள்; தலைமை தேர்தல் அதிகாரி

தமிழகத்தில் 2.11 லட்சம் வாக்குச்சாவடி நிலைமுகவர்கள் உள்ளனர் என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.;

Update:2025-11-13 06:53 IST

சென்னை,

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வாக்குச்சாவடி நிலைமுகவர்களை நியமிப்பதற்கான மாற்றியமைக்கப்பட்ட அறிவுறுத்தல்களை இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. பொதுவாக, வாக்காளர் பட்டியலின் குறிப்பிட்ட பாகத்தில் பெயர் பதிவு செய்யப்பட்ட வாக்காளர் ஒரு வாக்குச்சாவடி நிலைமுகவராக இருப்பார்.

இப்போது, வாக்காளர் பட்டியலின் குறிப்பிட்ட பாகத்தில் பெயர் பதிவு செய்த வாக்குச்சாவடி நிலைமுகவர் கிடைக்காத பட்சத்தில், அதே சட்டமன்றத் தொகுதியில் பெயர் பதிவு செய்யப்பட்ட எந்தவொரு வாக்காளரும் வாக்குச்சாவடி நிலைமுகவராக நியமிக்கப்படலாம்.

அவ்வாறு நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவர் தனது நியமிக்கப்பட்ட பகுதியின் வரைவு வாக்காளர் பட்டியலில், இறந்த அல்லது இடம் பெயர்ந்த வாக்காளர்களின் பதிவுகளை அடையாளம் காணும்பொருட்டு, ஆய்வு செய்வதற்கு முற்படுவர். தமிழ்நாட்டில் 2,11,445 வாக்குச்சாவடி நிலைமுகவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்