சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 22 ஆண்டுகள் சிறை
சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் ரீதியான துன்புறுத்தல் கொடுத்துள்ளார்.;
திருச்சி ,
திருச்சி மாவட்டம், மணப்பாறை சூலியம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் அய்யாவு. இவரது மகன் பாரதி (வயது 21). இவர், 14 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் ரீதியான துன்புறுத்தல் கொடுத்துள்ளார்.
இதுகுறித்த புகாரின்பேரில் மணப்பாறை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாரதியை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு திருச்சி மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் சாட்சி விசாரணைகள் நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று நீதிபதி சண்முகப்பிரியா தீர்ப்பு கூறினார். அதில், பாரதிக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.22 ஆயிரம் அபராதம் விதித்தும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.