பிடே மகளிர் உலக ராபிட் செஸ் சாம்பியன் பட்டம் வென்ற கொனேரு ஹம்பிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை தொடக்கம்
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் மாணவியின் அடையாளங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கை வெளியானது குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை தொடங்கி உள்ளது. பாலியல் வன்கொடுமை வழக்கு ஆவணங்கள், எப்.ஐ.ஆர் வெளியான ஆவணங்கள் சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
பா.ம.க. ஊடகப்பேரவை இளைஞர் அணி தலைவர் பொறுப்பில் இருந்து முகுந்தன் விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பரபரப்பின் உச்சத்தில் பாக்சிங் டே டெஸ்ட்.. கடைசி விக்கெட்டை வீழ்த்த தடுமாறும் இந்தியா
4-வது நாள் முடிவில் ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் அடித்துள்ளது. நாதன் லயன் 41 ரன்களுடனும், ஸ்காட் போலந்து 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளும், சிராஜ் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். ஆஸ்திரேலியா இதுவரை 333 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நாளை கடைசி நாள் ஆட்டம் என்பதால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் உச்சகட்ட பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அம்மாநிலத்தின் குட்ச் மாவட்டம் பச்சா பகுதியை மையமாக கொண்டு காலை 10.06 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. அதேவேளை, இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
‘யார் அந்த சார்?’ என்ற கேள்வியுடன் தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் 'யார் அந்த சார்?’ என்ற கேள்வியுடன் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.