294 ஆசிரியர்களுக்கு, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு
42 உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் விருப்பமான மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் பெற்றனர்.;
சென்னை,
தமிழகத்தில் 2025-26-ம் கல்வியாண்டு, ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. இதில், 153 மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், 42 உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அவர்கள் விருப்பமான மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் பெற்றனர். அதேபோல், இன்று நடைபெற்ற கலந்தாய்வில், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் இருந்து 294 பேர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு ஆணை பெற்றுள்ளனர்.
மேலும், தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வில் ஒன்றியத்திற்குள் 504 ஆசிரியர்களும், கல்வி மாவட்டத்திற்குள் 65 ஆசிரியர்களும் பணி நிரவல் செய்யப்பட்டுள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.