போலி ரசீது உருவாக்கி இடம் விற்பனை செய்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை
மோசடியில் ஈடுபட்டதாக 6 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.;
திண்டுக்கல்,
திண்டுக்கல்லை சேர்ந்த நபர் வெளிநாட்டில் கப்பலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, திண்டுக்கல்லில் நேரடியாக பணம் கொடுத்ததாக போலி ரசீது உருவாக்கி மோசடி செய்து இடத்தை விற்பனை செய்ததாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் ஜுடிசியல் மாஜிஸ்ட்ரேட் -2 நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், மோசடியில் ஈடுபட்ட ராஜேந்திரன் என்பவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.40 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் இவ்வழக்கில் உள்ள மற்ற 5 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்