சென்னையில் இருந்து 3,225 சிறப்பு பஸ்கள் வெளியூர்களுக்கு இயக்கம்

கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.;

Update:2025-09-28 20:50 IST

வண்டலூர்,

ஆயுத பூஜை பண்டிகை வருகிற 1-ந்தேதி (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதைத் தொடர்ந்து மறுநாள் (2-ந்தேதி) விஜயதசமி என விடுமுறை நாட்கள் வருகின்றன. ஏற்கனவே பள்ளி காலாண்டு விடுமுறை, சனி, ஞாயிறு வார இறுதி விடுமுறை நாட்கள் என்பதால் சென்னையில் இருந்து பெரும்பாலானோர் தென் மாவட்டங்களில் உள்ள தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.இதையடுத்து பயணிகளின் வசதிக்காக கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

விழுப்புரம், திண்டிவனம், திருவண்ணாமலை, கும்பகோணம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தென்காசி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகப்பட்டினம், நாகர்கோவில் என பல்வேறு பகுதிகளுக்கு வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 3,225 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. கடந்த 26-ந்தேதி வழக்கமான 2,092 பஸ்களுடன் 1,145 சிறப்பு பஸ்களும், 27-ந்தேதி 655 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. நாளை (29-ந்தேதி) 115 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. 30-ந்தேதி பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால், வழக்கமான 2,092 பஸ்களுடன் கூடுதலாக 1,310 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்