நாமக்கல் பண்ணைகளில் 40 சதவீத முட்டைகள் தேக்கம்
நாமக்கல்லில் உள்ள பண்ணைகளில் தினமும் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.;
நாமக்கல் மாவட்டத்தில் சிறிய மற்றும் பெரியதாக உள்ள 1,100 முட்டை கோழிப்பண்ணைகளில் இருந்து தினமும் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கிருந்து தமிழகம் மட்டுமல்லாது, பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் முட்டை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பள்ளி கோடை விடுமுறை உள்ளிட்ட காரணங்களால் நாமக்கல் கோழிப்பண்ணைகளில் 40% முட்டைகள் தேக்கமடைந்துள்ளன. மேலும் வெயில் அதிகரிப்பால் தினசரி சுமார் 50 லட்சம் முட்டைகள் உற்பத்தி சரிந்துள்ளதாக கூறப்படுகிறது.
பள்ளிகளில் உள்ள மதிய உணவுத் திட்டத்திற்கு தினசரி அனுப்பப்பட்ட சுமார் 1 கோடி முட்டைகள் மற்றும் பச்சை முட்டைகளில் செய்யப்படும் மயோனஸ்க்கு தடை விதிக்கப்பட்டதாலும் சுமார் 80 லட்சம் முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.