சேரன்மகாதேவியில் பலத்த காற்றினால் 60 ஆயிரம் வாழைகள் சேதம்: திருநெல்வேலி கலெக்டர் ஆய்வு
சேரன்மகாதேவியில் கனமழை, சுழல் காற்று காரணமாக கூனியூர், வடக்குகாருகுறிச்சி, வடக்குவீரவநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 60 ஆயிரம் வாழைகள் சாய்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.;
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி வட்டம், கூனியூர், வடக்குகாருகுறிச்சி, தெற்கு அரியநாயகிபுரம், வடக்கு வீரவநல்லூர்-1 வடக்குவீரவநல்லூர்-2, கிரியம்மாள்புரம், வடக்கு அரியநாயகிபுரம்-1, திருப்புடைமருதூர் ஆகிய இடங்களில் கனமழை மற்றும் பலத்த காற்றினால் சாய்ந்த வாழைகளை திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி வட்டாரத்தில் நேற்று மாலை 6 மணியளவில் பெய்த கனமழை மற்றும் சுழல் காற்று காரணமாக கூனியூர், வடக்குகாருகுறிச்சி, தெற்குஅரியநாயகிபுரம், வடக்குவீரவநல்லூர்-1 வடக்குவீரவநல்லூர்-2 கிரியம்மாள்புரம், வடக்கு அரியநாயகிபுரம்-1, திருப்புடைமருதூர் ஆகிய கிராமங்களில் சுமார் 60 ஆயிரம் வாழைகள் சாய்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
எனவே தோட்டக்கலை துறையினர் மழை மற்றும் காற்றினால் சாய்ந்த வாழைகள் குறித்த கணக்கெடுப்பு பணியினை விரைந்து மேற்கொண்டு, சேதம் குறித்த அறிக்கையினை விரைந்து தயாரிக்குமாறு மாவட்ட கலெக்டர் சுகுமார், தோட்டக்கலைத்துறை மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது சேரன்மகாதேவி வட்டாட்சியர் காஜாகரிபுன் நவாஸ், தோட்டக்கலைத்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.