‘இருமல் மருந்து தயாரிக்கும் நிறுவனத்திற்கு தடை விதிக்க முடியாது’ - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அந்த இருமல் மருந்தை மருந்தை வாங்கக்கூடாது என்று தமிழகத்தில் தடை விதித்திருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.;

Update:2025-10-07 07:30 IST

கோப்புப்படம்


வேலூர் காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ‘சமீபத்தில் காஞ்சீபுரத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து சாப்பிட்டு குழந்தைகள் இறப்பு மற்றும் உடல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதற்கு காரணமாக இருந்த மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?’ என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு அவர், ‘எங்களால் தடைவிதிக்க முடியாது. ஆனால் அந்த மருந்தை வாங்கக்கூடாது என்று தமிழகத்தில் தடை விதித்திருக்கிறோம்’ என்று கூறினார். தொடர்ந்து அவர் கூறுகையில், ‘தமிழ்நாடு முழுவதும் மலை மற்றும் கிராம பகுதிகளில் அமைந்துள்ள மருத்துவமனைகளில் பாம்பு கடி, நாய் கடிக்கான மருந்துகள் எப்பொழுதும் இருப்பு இருக்கின்ற வகையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மருந்துகள் இருப்பு இருக்கிறதா என்று தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். எனவே அனைத்து இடங்களிலும் இந்த இரண்டு மருந்துகளும் இருப்பில் உள்ளது.

தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் இல்லை. சாதாரண காய்ச்சல்தான் உள்ளது. அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழைக்காலத்தில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நடைபெற உள்ளது” என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்