கோவை அருகே வளர்ப்பு நாயை, கவ்விச் சென்ற சிறுத்தையால் பரபரப்பு

எட்டிமடை பகுதியில் கேமராக்களை பொருத்தி தீவிர கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.;

Update:2025-10-24 15:34 IST

கோப்புப்படம்

கோவை,

கோவை மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள எட்டிமடை பகுதியில் ஜெகநாதர் என்பவர் தனது தோட்டத்தில் நாய் ஒன்று வளர்த்து வந்தார். நேற்று முதல் அந்த நாயை காணவில்லை, அதை தேடிப் பார்த்தும் கிடைக்க வில்லை. இதனால் அவர், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார்.

அதில், தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை, வளர்ப்பு நாயை கவ்விக் கொண்டு செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கொடுத்த தகவலின் பேரில் மதுக்கரை வனத்துறையினர் வந்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் கேமராக்களை பொருத்தி தீவிர கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். தோட்டத்தில் புகுந்த சிறுத்தை, வளர்ப்பு நாயை கவ்விச் சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்