வாணியம்பாடி அருகே திடீரென லாரி கொழுந்துவிட்டு எரிந்ததால் பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி திடீரென கொழுந்துவிட்டு எரிந்தது.;

Update:2026-01-13 07:45 IST

திருப்பத்தூர்,

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் சிமெண்ட் மிக்சிங் லாரியை ஆந்திரா மாநிலம் நெல்லூர் பகுதிக்கு ஒட்டிச் சென்று கொண்டிருந்தார். அப்போது திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கேதண்டபட்டி அருகே லாரியை சாலை ஓரம் நிறுத்தி விட்டு லாரியின் முகப்பு பகுதியில் கேஸ் அடுப்பில் குக்கர் மூலம் சமையல் செய்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக திடீரென குக்கர் வெடித்து சுரேஷ் படுகாயம் அடைந்து லாரியின் முகப்பு பகுதியில் இருந்து கீழே குறித்து உயிர் தப்பினார். இதனை தொடர்ந்து லாரி கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. அப்போது திடீரென லாரியில் இருந்த சிலிண்டரும் அதிக சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் லாரி கொழுந்துவிட்டு எரிந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு நாட்றம்பள்ளி தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். மேலும் நாட்றம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரி ஓட்டுனர் சுரேஷ் மற்றும் உதவியாளர் கோகுல் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்