பெண் குளித்ததை பார்த்த வாலிபர்.. அடுத்து நடந்த சம்பவத்தால் விபரீதம்

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2025-05-29 11:01 IST


தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள வெல்லம், சர்க்கரை தயாரிக்கும் கூடம் ஒன்றில், கர்நாடக மாநிலம் மானக்கள்ளி கணேஷ்புரா பகுதியை சேர்ந்த அமல்ராஜ் (வயது 28) என்பவர் வேலை பார்த்து வந்தார். இவருடன் சக பணியாளர்களும் அங்கு தங்கி வேலை பார்த்து வருகிறார்கள்.

சம்பவத்தன்று அங்கு பணியாற்றும் ஒருவரின் மனைவி குளித்து உள்ளார். அந்த பெண் குளித்ததை அமல்ராஜ் பார்த்துள்ளார். தான் குளித்ததை அமல்ராஜ் பார்த்ததை அறிந்த அந்தப் பெண் உடனடியாக அமல்ராஜின் அக்கா மற்றும் அவரது கணவரிடம் செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதை அறிந்த அமல்ராஜின் அக்கா மற்றும் அவரது கணவர் ஆகிய இருவரும் செல்போனில் தொடர்பு கொண்டு அமல்ராஜை திட்டி உள்ளனர்.

இதனால் மனமுடைந்த அமல்ராஜ் தன்னுடன் பணியாற்றுபவர்களிடம் அருகில் உள்ள மாட்டுக்கொட்டகையில் படுக்க செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளார். காலையில் அனைவரும் எழுந்து பார்த்தபோது மாட்டு கொட்டகையில் இருந்த கொய்யாமரத்தில் மாடு கட்டும் கயிறால் அமல்ராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலை செய்து கொண்ட அமல்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்