நெல்லையில் அபாகஸ் பயிற்சி நிறைவு விழா: போலீஸ் கமிஷனர் பாராட்டு
நெல்லை மாநகர காவல் துறையில் பணிபுரியும் போலீஸ் அதிகாரிகள், போலீசாரின் குழந்தைகளுக்கு 15 நாட்கள் அபாகஸ் பயிற்சி வகுப்பு நடந்தது.;
திருநெல்வேலி மாநகர காவல் துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களின் குழந்தைகளுக்கு கோடை விடுமுறையை பயனுள்ளதாக்கும் வகையில் கணித அடிப்படை அபாகஸ் பயிற்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி அறிவுறுத்தலின் பேரில், ஆசிரியர் யாஸ்மின் மாணவர்களுக்கு 15 நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடத்தினார்கள். வகுப்பின் இறுதி நாளான நேற்று முன்தினம் (1.6.2025) 61 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி மாநகர போலீஸ் கமிஷனர் பாராட்டினார்.