ரூ.5 கோடி நில மோசடி வழக்கில் தலைமறைவு குற்றவாளி கைது

சென்னையில் இறந்தவரின் பெயரில் இருந்த ரூ.5 கோடி மதிப்பிலான சொத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து, பின்னர் பலே மோசடி அரங்கேறியது.;

Update:2025-11-30 09:32 IST

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் தாராசந்த் (வயது 59). இறந்து போன இவருடைய தாயார் பெயரில் இருந்த ரூ.5 கோடி மதிப்பிலான சொத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்தும், பின்னர் அந்த சொத்தை வங்கியில் அடமானம் வைத்து ரூ.3.03 கோடி கடன் பெற்றும் பலே மோசடி அரங்கேறியது. இந்த மோசடி சம்பவம் குறித்து தாராசந்த் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்து இருந்தார்.

அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 5 பேரை உடனடியாக கைது செய்தனர். இந்த நிலையில் இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த ஆலந்தூரை சேர்ந்த டோமினிக் ஜேவியர்(43) நேற்று கைது செய்யப்பட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்