நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானவர் கைது

பாப்பாக்குடி பகுதியில் போதைப்பொருள் தடுப்பு வழக்கில் ஈடுபட்ட நபர், கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்தார்.;

Update:2025-06-12 08:57 IST

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி பகுதியில் கடந்த 2017-ம் ஆண்டு போதைப்பொருள் தடுப்பு வழக்கில் ஈடுபட்ட கபாலிபாறை, தெற்கு தெருவை சேர்ந்த முருகன்(எ) செய்யதுஅலி (வயது 47) கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்தார். இவர் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 1 1/2 மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், அவருக்கு நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து முருகன்(எ) செய்யது அலியை பாப்பாக்குடி போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று (11.6.2025) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்