நிர்வாகச் சீர்கேடு: ராசிபுரம் நகர மன்ற நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி
ராசிபுரம் நகராட்சியில் நிலவி வரும் பல்வேறு நிர்வாகச் சீர்கேடுகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்;
சென்னை,
அதிமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ் நாட்டில் கடந்த 50 மாத காலமாக ஒரு அலங்கோல ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த ஆட்சியில் மக்கள் பல்வேறு வகைகளில் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மக்கள் நிம்மதியுடன் வாழ்வதற்கான சூழலை இந்த அரசு ஏற்படுத்தவில்லை. தற்போதைய அரசு முற்றிலும் செயலிழந்த அரசாக விளங்கி வருகிறது.
அந்த வகையில், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சியில் நிலவி வரும் பல்வேறு நிர்வாகச் சீர்கேடுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி வாழ் மக்கள் புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர். அதன் விபரம் வருமாறு :
* ராசிபுரம் நகராட்சியில் மாதம் ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுவதால், மக்கள் குடிநீருக்காக அலையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
*ராசிபுரம் நகராட்சியில் தற்போதுள்ள பேருந்து நிலையம் போதிய வசதியுடன் மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகின்றது. இந்நிலையில், இந்தப் பேருந்து நிலையத்தை தேவையில்லாமல் சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அணைப்பாளையம் என்ற கிராமத்திற்கு மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சி வாழ் மக்களுக்கு நாள்தோறும் முறையாக குடிநீர் வழங்காத; ஆதாய நோக்கத்திற்காக ராசிபுரம் நகராட்சியில் உள்ள பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய முயற்சி மேற்கொள்ளும் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு மற்றும் நகர மன்ற நிர்வாகத்தைக் கண்டித்தும்; மக்களின் குடிநீர் தேவையை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றிடவும், பேருந்து நிலைய இடமாற்ற முயற்சியைக் கைவிடவும் வலியுறுத்தி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நாமக்கல் மாவட்டத்தின் சார்பில் 16.7.2025 – புதன் கிழமை காலை 10 மணியளவில், ராசிபுரம் பஸ் நிலையம், எம்.ஜி.ஆர். சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமானபி. தங்கமணி, அவர்கள் தலைமையில் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர், கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்; மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள், நகர, பேரூராட்சி மன்ற முன்னாள் வார்டு உறுப்பினர்கள், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நிர்வாகத் திறனற்ற விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசையும்; ராசிபுரம் நகர மன்ற நிர்வாகத்தையும் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.என தெரிவித்துள்ளார் .